வேட்டையன் பாட்டுக்கு Full Vibe செய்த கூலி படக்குழு| Full Vibe for the Vettaiyan song was done by the Coolie film crew
வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது.முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக படக்குழு அறிவித்தது.இன்று ஓணம் பண்டிகை கேரளம் மற்றும் தமிழ்நாட்டில் மிகவும் விமர்சையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி கூலிப்படக்குழு ஓணம் பண்டிகையை முன்னிட்டு வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாட்டிற்கு நடனம் ஆடியுள்ளனர்.இதை லைகா தயாரிப்பு நிறுவனம் ஓணம் வாழ்த்து கூறி வெளியிட்டுள்ளனர். இதில் பணியாற்றியவர்களுடன் ரஜினி நடனம் ஆடியுள்ளார். இதில் ரஜினி ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரனுக்கு பாட்டின் ஸ்டெப் சொல்லி கொடுக்கிறார். லோகேஷ் கனகராஜை ரஜினி ஆட கூப்பிடுவது மிகவும் க்யூட்டாக இருக்கிறது. இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.Onam Vibes with Coolie team!When THALAIVAR ? & team COOLIE ⌚ went The VETTAIYAN ?️ way for ONAM ? #MANASILAAYO ft. team COOLIE ⌚ with the One & Only ?#Vettaiyan ?️ @rajinikanth @tjgnan @anirudhofficial @Dir_Lokesh @girishganges @SonyMusicSouth #HappyOnam2024 #Onam pic.twitter.com/w1KJc3E2iaஉங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.